உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., இன்று பிரசாரம் துவக்கம்

தி.மு.க., இன்று பிரசாரம் துவக்கம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் அறி-விக்கப்பட்டு, 'இண்டி' கூட்டணி ஆலோசனை கூட்டம் நடத்தப்-பட்டது. இதில், 12ம் தேதி மாலை பெரியார் நகரில் பிரசாரம் துவங்கும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார். 'ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால், 13ல் பிரச்சாரம் துவங்கும்' என்றார். ஆனால் தேர்தல் ஆணைய இணைய தளத்தில், 48 மணி நேரத்-துக்கு முன் பிரசாரத்துக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டி உள்ளது. இவ்விதிப்படி விண்ணப்பம் செய்யாததால், 12, 13 தேதிகளில் பிரசாரத்தை துவங்க முடியவில்லை.இந்நிலையில் இன்று (14ம் தேதி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று பொங்கல் பண்டிகை என்பதால், அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவதை தடுக்க வேண்டாம் என்ற நோக்கில் மாலை, 4:00 மணிக்கு பெரியார் நகர் பகுதி மாணிக்கம் தியேட்டர் அருகே பிரசாரத்தை துவங்க உள்-ளனர். அமைச்சர் முத்துசாமி தலைமையில் அப்பகுதியில் மட்டும் பிரசாரத்தை நடத்திவிட்டு, நாளை முதல் முழு அளவில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை