தி.மு.க., செயற்குழு கூட்டம்
ஈரோடு :ஈரோடு தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட தி.மு.க., தேர்தல் குறித்த செயற்குழு கூட்டம், மேட்டுக்கடையில் நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.மாவட்ட, மாநகர, பகுதி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், ஒருங்கிணைப்பு பணி செய்பவர்கள், கடந்த, 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதியில், 2 இடைத்தேர்தல்களில் நடந்த சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். அவற்றுக்கான தீர்வுகள் பற்றி விவாதித்தனர். எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், முன்னாள் எம்.பி., கந்தசாமி, நிர்வாகிகள் சச்சிதானந்தம், குறிஞ்சி சிவகுமார், குமார் முருகேஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.