கிணற்றில் விழுந்த நாய் பத்திரமாக மீட்பு
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த தேசிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 55; இவர் வளர்த்து வரும் நாய், பட்டாசு சத்தத்தால் மிரண்டுபோய், பிரவீன்குமாரின் தோட்டத்து கிணற்றில் விழுந்து விட்டது. 60 அடி ஆழ கிணற்றில் தத்தளித்தது. சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் கயிறு கட்டி இறங்கி நாயை பத்திரமாக மீட்டனர்.