உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடை தூர்வாரும் பணி மும்முரம்

ஓடை தூர்வாரும் பணி மும்முரம்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சாஸ்திரி நகர் அடுத்த லெனின் வீதி கால்வாயை துார்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதை ஆணையர் அர்பித்ஜெயின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஓடையில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். நீர்வழிப்பாதையில் தேங்கியுள்ள மண், கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி, தடையின்றி தண்ணீர் செல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதேபோல், மற்ற இடங்களில் புதர்மண்டி கிடக்கும் ஓடைகள் குறித்து ஆய்வு செய்து, துார்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பாக்கியலட்சுமி, செயற்பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி