உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ளக்காதலியை கீறிய டிரைவர் கைது

கள்ளக்காதலியை கீறிய டிரைவர் கைது

ஈரோடு,ஈரோடு கருங்கல்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 26; பட்டன் ஸ்டோர் வாகன டிரைவர். திருமணமானவர். ஈரோட்டை சேர்ந்த திருமணமான, 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்பெண் சில மாதங்களாக மாதேஷை கண்டுகொள்ளவில்லை. இதில் ஆத்திரமடைந்தவர், இளம்பெண்ணின் கழுத்தில் நேற்று கத்தியால் கீறியதில் காயம் ஏற்பட்டது. அந்தப்பெண் அளித்த புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாதேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ