மேலும் செய்திகள்
இளைஞர் திடீர் மரணம் போலீசார் விசாரணை
19-Dec-2024
சென்னிமலை: கொடுமுடியை அடுத்த கோரக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 40; சென்னிமலையில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தமிழரசி. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு திட்ட சமையலர். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வேனில் ஆட்களை ஏற்றிவிட்டு சென்னிமலை-ஈங்கூர் சாலையில் முகாசிப்பி-டாரியூர் அருகே, பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் இரவு நிறுத்தி-யுள்ளார். காருக்குள் துாங்கிய நிலையில் வெகு நேரமாகியும் வெளியில் வரா-ததால், அருகில் இருந்த பஞ்சர் கடை நடத்தி வரும் அரவிந்த் சென்று பார்த்த-போது மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுரேஷ்குமாரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரி-வித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Dec-2024