மேலும் செய்திகள்
தபால் குறைகேட்பு 30ம் தேதி நடக்கிறது
12-Jun-2026
திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை
17-Jun-2026
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில், ஈரோடு திருநகர் காலனி தபால் அலுவலக தபால்காரர் சுரேஷ், 38, சைக்கிளில் தபால்களை வினியோகம் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தார். ஒரு சந்துக்குள் சென்றபோது இருவர், அவரிடம் இருந்த தபால்களை பறித்து கொண்டனர். முதியோர் உதவித்தொகை பணம் உள்ளதா?. வேறு ஏதேனும் பணம் உள்ளதா என தபால்களை பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு சில தபால்களை கிழித்து சாக்கடையில் வீசியுள்ளனர். பிறகு தபால்களை கையில் கொத்தாக அள்ளி கிழித்து துாக்கி எறியவே, சுரேஷ் கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அப்போது இருவரும் போதையில் இருந்ததால், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்தபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவர் சவால் விடுத்தபடி, போலீஸ் பிடியில் இருந்து தப்பி சுவர் ஏறி குதித்து ஓடி தலைமறைவானார். மற்றொரு வாலிபரை மட்டும் பிடித்து சென்றனர். தப்பியது அதே பகுதியை சேர்ந்த அருண், போலீசிடம் சிக்கியது பிரகாஷ், 25, என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
12-Jun-2026
17-Jun-2026