உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீமான் உருவ பொம்மை எரித்த எட்டு பேர் கைது

சீமான் உருவ பொம்மை எரித்த எட்டு பேர் கைது

ஈரோடு: ஈ.வெ.ரா., குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி-ணைப்பாளர் சீமான் பேசியதை கண்டித்து, பல்வேறு தரப்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு தாலுகா அலுவலகம் எதிரே, திருமகன் ஈவெரா சாலையில், திராவிட தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலை-மையில், சீமானின் உருவ பொம்மையை நேற்று எரித்தனர். சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்டவர்கள், உருவ பொம்மை தீப்பற்றி எரிந்த நிலையில், பன்னீர்செல்வம் பூங்காவை நோக்கி இழுத்து சென்றனர். டவுன் போலீசார் உருவ பொம்மையை பறி-முதல் செய்து, பிரபாகரன் உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ