உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.பி.எஸ்., பிரசார கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடு ஆய்வு

இ.பி.எஸ்., பிரசார கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடு ஆய்வு

பெருந்துறை: மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தில், அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., வரும், 8ம் தேதி மாலை, பெருந்துறையில் பேசுகிறார். இதற்காக காஞ்சிக்கோயில் சாலை தாய் நகர் பகுதியில் ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த இடத்தில் பெருந்துறை டி.எஸ்.பி., சிவகுமார், பெருந்துறை போலீசார், பாதுகாப்பு வசதி மற்றும் மேடை அமைக்கும் பணிகளை, நேற்று ஆய்வு செய்து, கட்சியினரிடையே கேட்டறிந்தனர். கூட்டம் நடக்கும் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி, தொண்டர்கள் மற்றும் மக்கள் அமர்வதற்கான முன்னேற்பாடு பணி தீவிரமாக நடப்பதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை