உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிகிச்சைக்கு வந்த நிலையில் மரணம் ஈரோடு முதியவரின் கண்கள் தானம்

சிகிச்சைக்கு வந்த நிலையில் மரணம் ஈரோடு முதியவரின் கண்கள் தானம்

ஈரோடு; ஈரோடு, திருநகர் காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 84; உடல்நலக்குறைவால் ஈரோடு எஸ்.எஸ்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரின் கண்களை தானமாக வழங்க முன்வந்தனர்.இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சித், மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி, ஈரோடு கண் வங்கியை தொடர்பு கொண்டு கண் தானத்துக்கு ஏற்பாடு நடந்தது. கண் வங்கி குழுவினர் நடைமுறைகளை பின்பற்றி, கண்களை தானமாக எடுத்து கொண்டனர். இரு கண்களும் எஸ்.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கே வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ