ஈரோடு சட்ட கல்லுாரி சார்பில் உலக சாதனை அரங்கேற்றம்
ஈரோடு:ஈரோடு சட்டக்கல்லுாரி, இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லுாரி, ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லுாரி ஆகியவை, ஈரோடு ரோட்ராக்ட் கிளப்புடன் இணைந்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், அதுகுறித்த சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஈரோடு சட்டக்கல்லுாரி மைதானத்தில், மாணவர்கள் தொடர் சங்கிலி முறையில் நீதி தேவதையின் மனித உருவமைப்பை தத்ரூபமாக வடிவமைத்து சாதனை படைத்தனர்.நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காயத்ரி ரவிசந்திரன், இணை செயலாளர் அருண் பாலாஜி வரவேற்றனர். அறக்கட்டளை துணைத்தலைவர் டாக்டர் கிஷோர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் சாரு ரூபா கிஷோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு மேலாளர் அபிநயா ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அறிவித்தார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 1,545 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா, உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ், பதக்கத்தை, ஸ்ரீசாய் சிந்து அறக்கட்டளையின் துணை தலைவர் காயத்ரியிடம் வழங்கினார்.