உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகராட்சி டெண்டர் தேதி மாற்றம்

ஈரோடு மாநகராட்சி டெண்டர் தேதி மாற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், 19 இனங்களுக்கான ஏலம் டிச., 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.இது குறித்த, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித்ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனி மார்க்கெட் வணிக வளாக கடைகள் மற்றும் எல்.இ.டி., போர்டு விளம்பரம் செய்யும் உரிமம், காளைமாட்டு சிலை அருகில் உள்ள வணிக வளாக கடைகள், மத்திய பஸ் ஸ்டாண்ட் புதிய வணிக வளாக கடைகள், சோலார் புறநகர் பஸ் ஸ்டாண்ட் உணவகம் மற்றும் வணிக வளாக கடைகள், ஸ்ரீகார்டன் பகுதியில் உள்ள ஸ்டெம் பார்க்கில் கட்டணம் வசூல் உரிமம் உட்பட, 19 இனங்களுக்கு மறு பொது ஏலம், ஒப்பந்தபுள்ளி மற்றும் மின் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் நவ., 25ம் தேதி நடைபெற இருந்த நிலையில், சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டு, டிச.,8ம் தேதி காலை 9:00 முதல் 10:00 மணி வரை நடைபெறுகிறது.டிச.,9ம் தேதி காலை 10:00 முதல் 11:00 மணி வரை ஒப்பந்தபுள்ளி, 11:30 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், உரிம இனங்களுக்கு செலுத்த வேண்டிய வைப்பு தொகைக்கான வங்கி வரைவோலையை டிச., 7 காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணிக்குள் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இது தொடர்பான நிபந்தனை, விபரங்களை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவை அணுக வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை