உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநில ஜிம்னாஸ்டிக்ஸில் ஈரோட்டுக்கு 26 பதக்கம்

மாநில ஜிம்னாஸ்டிக்ஸில் ஈரோட்டுக்கு 26 பதக்கம்

ஈரோடு, தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேசன் சார்பில், மாநில அளவிலான போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஈரோட்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 13 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் இருந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகள், 6 வயது முதல் 17 வயது வரை நான்கு விதமாக நடந்தது.ஈரோட்டை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி நேத்ராஸ்ரீ, நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஆறு பதக்கம் வென்றார். யோகன், கவுசிகா, ஆஸ்பிக், ரிதன்யா, ரித்தி, திவ்யா, மணிலேஸ்வரன், நித்தில்குமார், தணீஷ் ஆகியோர், ஏழு தங்கம், ஐந்து வெள்ளி, எட்டு வெண்கல பதக்கம் வென்றனர். மொத்தம், 11 தங்கம், ஆறு வெள்ளி, 9 வெண்கல பதக்கம் கைப்பற்றினர். அனைவரும் ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமாரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை