6 அமைச்சர்களுடன் நிர்வாகிகள் கூட்டம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., பிரசாரம், வாக்காளர் சந்திப்பு, முக்கிய நிர்வாகிகளிடம் பேசுவது, ஓட்டை அதிகரிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம், பெருந்-துறையில் தனியார் விடுதியில் நடந்தது.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, வேலு, செந்தில்-பாலாஜி, சாமிநாதன், நாசர், தி.மு.க., தலைமை இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மற்றும் கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் உள்ள முக்கிய உள்ளூர் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்-றனர். பிப்., 5ல் ஓட்டுப்பதிவு, பிப்., 3 மாலையுடன் தேர்தல் பிர-சாரம் நிறைவடைய உள்ளது. பிரசாரத்துக்கு, ஐந்து நாட்களும் பிற பணிகளுக்கு, ஆறு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.எனவே, வாக்காளர்களை 'நெருக்கமாக' சந்தித்து ஓட்டுக்களை பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை. பா.ம.க., - நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், தி.மு.க., கூட்டணியில் இல்லாத சிறுபான்மையினர் அமைப்புகள் போன்றவற்றை சந்தித்து பேசி முடிக்க வேண்டும். கடந்த, 2023 தேர்தலில் பதிவான ஓட்டும், தி.மு.க., பெற்ற ஓட்டும் குறையாமல் பெற தேவையான முயற்சிகளை மேற்-கொள்ள யோசனைகளை பகிர்ந்துள்ளனர்.