மங்கிய வேகத்தடை: விபத்து அபாயம்
கோபி:கோபி அருகே குஞ்சரமடை பிரிவில், மங்கிய வேகத்தடையால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கவுந்தப்பாடியில் இருந்து நல்லாம்பட்டி மற்றும் குஞ்சரமடை இணைப்பு சாலையாக, மூன்று சாலை சந்திப்பு உள்ளது. அப்பிரிவில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. அதன் மீது போடப்பட்ட வெள்ளைக்கோடு அழிந்து மங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதை அறியாமல், நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை பெயின்ட் கொண்டு அடையாளம் செய்ய, வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.