உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஈரோடு:கொடுமுடி கொளத்துபாளையம் அருகே தேவம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 65. இவர் மனைவி சம்பூர்ணம், 59. விவசாயம் செய்கின்றனர். கடந்த, 3ல் ஆடி 18ஐ முன்னிட்டு கன்னிமார் கோவிலுக்கு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுக்க, டிராக்டரில் செல்ல தம்பதியர் தயாராக இருந்தனர். தேவம்பாளையம் விநாயகர் கோவில் முன் டிராக்டர் நின்று கொண்டிருந்தது. டிராக்டரை இயக்க செய்து விட்டு டிரைவர் கீழே இறங்கி சென்றுள்ளார். டிராக்டர் முன் பழனிசாமி நின்று கொண்டிருந்தார். திடீரென டிராக்டர் தானாகவே கிளம்பி, பழனிசாமி மீது மோதியது. இதில் கீழே விழுந்ததில், அவருக்கு கணுக்காலில் ரத்த காயம் ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஸ்துமா இருந்ததும் தெரியவந்தது. அவரது கழுத்து தண்டுவடத்தில் காயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த, 6ல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 11ம் தேதி காலை இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ