உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இறைச்சி கழிவுகளை கொட்டிய இருவரை சிறை பிடித்த விவசாயிகள்

இறைச்சி கழிவுகளை கொட்டிய இருவரை சிறை பிடித்த விவசாயிகள்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அம்மன் நகர் அருகே தோட்டசாலை செல்லும் வழியில், மழைநீர் ஓடை உள்ளது. அப்பகுதியை சுற்றி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கடைகளில் வீணாகும் கோழி மற்றும் மாட்டிறைச்சி கழிவுகளை, கடைக்காரர்கள் விளை நிலங்களை ஒட்டியும், மழை நீர் ஓடையிலும் கொட்டி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் ஏற்-பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.அப்பகுதியில் திரியும் வெறி நாய்கள் கூட்டம், கூட்டமாக இறைச்சி கழிவுகள் இருக்கும் இடத்துக்கு மோப்பம் பிடித்து வந்து விடுவதால், பொதுமக்கள், விவசாயிகள் சாலையில் நட-மாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை இருசக்கர வாகனத்தில் இறைச்சி கழிவுகளை ஏற்-றிக்கொண்டு வந்த இருவர், தோட்டசாலை செல்லும் வழியில் விவசாய நிலத்தின் அருகே உள்ள மழை நீர் ஓடையில் கழிவு-களை கொட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசா-யிகள், அப்பகுதி மக்கள் சேர்ந்து, இருசக்கர வாகனத்தை சிறை பிடித்து, கழிவுகளை கொட்ட வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களிடம் விசாரித்த போது காந்திந-கரில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருவதும், வழக்கமாக இறைச்சி கழிவுகளை இங்குதான் கொட்டுவோம், உங்களுக்கு என்ன பிரச்னை என அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரி-வித்து விட்டு, இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகை யில், 'விளைநிலங்கள் முழுவதும் கோழி இறக்கை, இறைச்சி துண்டுகள் பரவி கிடக்கின்றன. கிண-றுகளிலும் கழிவுகள் விழுவதால், நீரை பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பலமுறை நகராட்சி நிர்வாகத்-திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நீர்நிலையில் இறைச்சி கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ