நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
காங்கேயம், காங்கேயம் ஒன்றியத்தில் திட்டுப்பாறை, நொய்யல், மருதுறை, நத்தக்காடையூர், முத்துார், மங்களப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 250 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கி வருகிறது. மருதுறையில் செயல்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவசர தேவைக்கு தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே மருதுறையில் செயல்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தை, திறந்து செயல்படுத்த வேண்டும் என்று, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை மற்றும் வருவாய் துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.