ரயிலில் இருந்து விழுந்த தந்தை, மகள் படுகாயம்
ஈரோடு, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா, 35; இவரின் மகள் நிவாஷினி, 4; சூர்யாவின் மனைவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். ஆயுதபூஜை தொடர் விடுமுறையால், மயிலாடுதுறையில் இருந்து ஈரோட்டுக்கு, ஜனசதாப்தி ரயிலில் குடும்பத்துடன் நேற்று முன்தினம் பயணித்தார். ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் அருகே கடந்தபோது, படிக்கட்டு அருகே நின்றிருந்த சூர்யாவும், மகள் நிவாஷினியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இருவரும் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.