மேலும் செய்திகள்
மாணவி உள்பட 3 பேர் மாயம்
16-Feb-2026
பவானி: நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் பெரிய-சாமி, 66; கூலி தொழிலாளி. கடந்த, 28ம் தேதி பவானியில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்வதாக கூறி சென்-றுள்ளார். அதன் பிறகு வரவில்லை. இந்நிலையில் அவரின் மகன் தமிழ்செல்வன் புகாரின்படி, பவானி போலீசார் தேடி வருகின்-றனர்.* மொடக்குறிச்சி தாலுகா எழுமாத்துார், பொன் விழா நகரை சேர்ந்தவர் மோகன். கூலி தொழிலாளி. இவர்களது மகள் பாவனா, 18; பிளஸ் 2 வரை படித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் தனது ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி எழுமாத்துார் செல்வதாக வீட்டில் இருந்து சென்ற பாவனா மீண்டும் வீடு திரும்பவில்லை. மொடக்குறிச்சி போலீஸில், அவரது தந்தை மோகன் கொடுத்த புகாரின் பேரில், அவரை தேடி வருகின்றனர்.
16-Feb-2026