உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அப்பா கணினி கூடம் திறப்பு

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அப்பா கணினி கூடம் திறப்பு

ஈரோடு, ஈரோடு கிழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரகுமாரின் தனி அலுவலகம், அகில்மேடு வீதியில் உள்ளது. இங்கு 'அப்பா கணினி இலவச பயிற்சி கூடம்' அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.பின் எம்.எல்.ஏ., சந்திரகுமார் கூறியதாவது: கடந்த முறை நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, சூரம்பட்டியில் எனது அலுவலகத்தில், மாணவ, மாணவியர், பெண்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி வழங்கினேன். தற்போது எனது அலுவலகத்தில், 20 கணினி அமைத்து, 2 பயிற்சியாளர் மூலம் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இலவசமாக கணினி பயிற்சி வழங்குகிறோம். அடிப்படை பயிற்சியாக ஒரு மாதம் தினமும், 1 மணி நேரம் என ஒரு ஷிப்ட்டுக்கு தலா, 20 பேர் வீதம் மாதம், 200 பேருக்கு பயிற்சி தருகிறோம். 3 'லெவலாக' தொடர்ந்து பயிற்சி பெறலாம். அடுத்த, 3 மாதத்தில் டெய்லரிங் மற்றும் அழகுக்கலை பயிற்சியும் பெண்களுக்கு வழங்க முயற்சித்துள்ளேன். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை