உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.சி., இயந்திரம் விற்பனை கடையில் தீ விபத்து

ஏ.சி., இயந்திரம் விற்பனை கடையில் தீ விபத்து

ஈரோடு:ஈரோட்டை அடுத்த லக்காபுரம் சாணார்மேட்டில், நரேன் என்பவருக்கு சொந்தமான 'ஏ.சி.,' விற்பனை, பழுது நீக்கும் கடை உள்ளது. 'ஏ.சி.,' மட்டுமின்றி பிரிட்ஜ் உள்ளிட்டவையும் பழுது நீக்கி தரப்படுகிறது. நேற்று மாலை, 4:10 மணியளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பழுது நீக்க வந்திருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. கொழுந்து விட்டு தீ எரிந்தது. மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சென்றாலும், அங்கிருந்தவர்கள் தீயை முழுமையாக அணைத்தனர். சீரற்ற மின் சப்ளையே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. விபத்தில் சேத மதிப்பு, இரண்டு லட்சம் ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை