மில்லில் தீ விபத்து பஞ்சு பேல் நாசம்
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அருகே சுங்கக்காரன் பாளையத்தில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது.நேற்று காலை, 5:00 மணியளவில் இயந்திரங்கள் செயல்பாட்டில் இருந்தபோது, கண்ட்ரோல் யூனிட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவி அருகேயிருந்த மெஷின் மற்றும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நுால் தயாரிக்கும் பஞ்சு பேல் உள்ளிட்டவற்றின் மீது பரவி எரிந்து நாசமானது. மில்லில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு குழாய் மற்றும் உபகரணங்கள் உதவியுடன், தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் ஒரு டன் எடையுள்ள பஞ்சு பொருட்கள் கருகி விட்டன. புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.