உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கசிவால் மெஸ்சில் தீ

மின் கசிவால் மெஸ்சில் தீ

ஈரோடு: ஈரோட்டில், மின் கசிவால் மெஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது.ஈரோடு, வளையக்கார வீதி ஜெயராம் சந்து பகுதியை சேர்ந்தவர் விஜய் மகரான், 25. ஈரோடு மணிக்கூண்டு அருகே, ஜின்னா வீதியில் மெஸ் (சாந்தி விஜய் மார்வாடி போஜனாலயா) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் மெஸ்சை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை, 6:15 மணியளவில் ஓட்-டலில் இருந்து கரும்புகை வந்தது.இதையடுத்து ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சென்று பார்த்த போது, மெஸ்சில் இருந்த ப்ரிட்ஜ் (குளிர்சாதன பெட்டி) தீப்பி-டித்து எரிந்து கொண்டிருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ப்ரிட்ஜ் மற்றும் சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை