தடை காலம் நிறைவால் மீன்கள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு: தமிழக கடல் பகுதியில் இரு மாதங்களாக மீன் பிடி தடை காலம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது கேரளாவில் இருந்து மட்டும் ஒன்பது டன் அளவுக்கு மீன்கள் வரத்தானது.தடை காலம் கடந்த, 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, ராமேஸ்வரம், நாகை, துாத்துக்குடி, காரைக்கால், கேரளா பகுதி-களில் இருந்து, 20 டன் மீன் நேற்று வரத்தானது. வரத்து அதிகரித்-ததால் மீன்கள் விலை குறைந்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கடல் கொடுவா--850, வெள்ளை வாவல்- - 1,200, கருப்பு வாவல்-900, வஞ்சரம்- - 1,100, சால்மோன்-900, முரல்-450, மயில்-800, கிளி-700, சங்கரா-400, விளமின்-600, தேங்காய் பாறை-600, பெரிய இறால்-800, சின்ன இறால்-600, ப்ளூ நண்டு-750, அயிலை-300, மத்தி 300, டுயானா-700, திருக்கை-450, வசந்தி - 600, கனவா-500. இதேபோல் கருங்கல்-பாளையம் மீன் மார்க்கெட்டுக்கும் மீன் வரத்து அதிகரித்தது.