மீன்கள் விலை உயர்வு
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, நாகை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து வழக்கமாக மீன்கள் வரத்தாகும். ஆனால் நேற்று குறைந்த அளவிலான மீன்களே வந்தன. மீனவர்கள் ஸ்டிரைக்கே இதற்கு காரணம். இதனால் வரத்து குறைந்து மீன்கள் விலை அதிகரித்தது. மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்சிரம்-1,200, ராட்-700, சங்கரா-350, ஊளி-550, ப்ளூ நண்டு-800, சாதா நண்டு-600, கடல்பாறை-600, இரால்-600 முதல் 800 வரை, ஐயிலை-300, நெத்திலி-400, லோகு, கட்லா தலா-200.