உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மீன் விற்பனை டல்

மீன் விற்பனை டல்

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு துாத்துக்குடி, நாகை, ராமேஸ்வரம், காரைக்கால், கேரளாவில் இருந்து, ஐந்து டன் மீன் நேற்று வந்தது. மக்கள் பெரும்பாலானோர் தீபாவளி பர்சேசுக்கு சென்றதால் வழக்கத்தை விட மார்க்கெட்டில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. புரட்டாசி முடிந்ததால் விற்பனை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். வஞ்சிரம் கிலோ-850 ரூபாய், கடல் அவுரி-650, வெள்ளை வாவல்-950, சங்கரா-350, மயில் மீன்-700, டுயானா-650, இறால்-700, கிளி மீன்-600 ரூபாய்க்கும் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை