உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உணவு பாதுகாப்பு உரிமம்; நம்பியூரில் சிறப்பு முகாம்

உணவு பாதுகாப்பு உரிமம்; நம்பியூரில் சிறப்பு முகாம்

நம்பியூர் : நம்பியூர் வட்டார அனைத்து வணிகர் சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், உரிமம் பெற சிறப்பு முகாம் நம்பியூரில் நடந்தது.நம்பியூர் பகுதி மளிகை கடை, ஓட்டல், உணவு உற்பத்தியாளர் மற்றும் பேக்கரி கடை உரிமையாளர்கள் உரிமம் பெற விண்ணப்பித்தனர். ஆறு மாதம் முன் காலாவதியான உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் புதுப்பித்து தரப்பட்டது. நம்பியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், ஸ்ரீதேவிப்ரியா, ரம்யா விண்ணப்பங்களை பெற்றனர். உணவு உற்பத்தியாளர் மற்றும் வணிகர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் உரிமம் புதுப்பிக்க மற்றும் பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை