உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர் உண்ணாவிரத போராட்டம்

சத்துணவு ஊழியர் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே, ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர்கள் பழனியம்மாள், இந்திராணி, அரசு ஊழியர் சங்கம் விஜயமனோகரன், விஜயன் உட்பட பலர் பேசினர்.தேர்தலின்போது ஸ்டாலின் வாக்குறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். சத்துணவில் உள்ள, 63,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, உணவு மானியத்தை ஒரு மாணவருக்கு, 5 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.சத்துணவு ஊழியர்களை அலைபேசியில் பள்ளி தோட்டத்தை பதிவிறக்கம் செய்வது, மாணவர்கள் வருகை பதிவு செய்தல், நிதியே வழங்காமல் நிதி போஜன திட்டத்தை நடைமுறை திட்டத்தை செயல்படுத்த கூறுவதையும், சிறுதானிய உணவு கண்காட்சியை நடத்த கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்கள் மூலம் அமலாக்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !