உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாஜி எம்.பி., நுால் வெளியீடு: த.மா.கா., வாசன் பங்கேற்பு

மாஜி எம்.பி., நுால் வெளியீடு: த.மா.கா., வாசன் பங்கேற்பு

ஈரோடு :முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி வரவேற்றார். இயக்குனர் சாந்தி துரைசாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். த.மா.கா., தலைவர் வாசன், 'பெருந்தலைவர் காமராஜர் பாதை' என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம் பெற்று கொண்டார்.தொடர்ந்து வாசன் பேசியதாவது: முன்னாள் எம்.பி., சித்தன், காமராஜரால் அடையாளம் காணப்பட்டவர். மக்கள் வழங்கிய அதிகாரத்தை மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தியவர். எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் பணியாற்றி நேர்மையாக திகழ்ந்தவர். அதனால்தான் இன்னும் நிலைத்துள்ளார் அவரது வரலாற்று நுால், வருங்காலங்களில் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது. தன்னலம் கருதாமல், அவரது செயல்கள் இளைஞர்களை வழிகாட்டும். இவ்வாறு பேசினார்.மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், பா.ஜ., மாநில செயலர் ராமசீனிவாசன், முன்னாள் எம்.பி., உடையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை