மேலும் செய்திகள்
அடிக்கல் நாட்டு விழா
08-Oct-2024
பவானி: சித்தோடு அருகேயுள்ள நசியனுார் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி, பனையம்பள்ளி, சுஜில்கரை அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டடம், பவானியில் புதிய வணிகவரி அலுவலக கட்டடம், பேரூராட்சி அலுவலக கூடுதல் கட்டடம் என, 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பெரியவிளாமலை பஞ்சாயத்தில், 28 லட்சத்தில் கட்டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபல் சுன்கரா, கூடுதல் கலெக்டர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2024