உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முழு அளவில் அரசு செட்டாப் பாக்ஸ்கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மனு

முழு அளவில் அரசு செட்டாப் பாக்ஸ்கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மனு

முழு அளவில் அரசு செட்டாப் பாக்ஸ்கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் மனுஈரோடு:தமிழக கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் தலைவர் ரமேஷ், செயலாளர் செழியன் ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கடந்த, 4 ஆண்டாக அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஒளிபரப்பு தடைபடுகிறது. சிலர் தனியார் செட்டாப் பாக்ஸ் வழங்கி, ஒளிபரப்பை தொடர்கின்றனர். அரசு கேபிள் நிறுவனம் அதிக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி, தனியார் பாக்ஸ்களை அகற்ற வேண்டும். ஏற்கனவே உள்ள ஆப்பரேட்டர்களுக்கே குறைவான வாடிக்கையாளர் உள்ள நிலையில், புதிய ஆப்பரேட்டர்களுக்கு அனுமதி வழங்குவதால் பிரச்னை ஏற்படுகிறது. தனியார் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தியவர்கள், அரசு பாக்ஸ் கொடுத்தால், 'தனியார் பாக்ஸ்களில் வரும் சேனல்கள், அரசு பாக்ஸில் வராது' எனக்கூறி மாற மறுக்கின்றனர். தற்போது அரசு பாக்ஸ்களை பொருத்த சில இடங்களில் நிர்பந்தம் செய்வது, ஆப்பரேட்டர்களுக்கும், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை