உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாட்டம் நால்வர் கைது 6,500 ரூபாய் பறிமுதல்

சூதாட்டம் நால்வர் கைது 6,500 ரூபாய் பறிமுதல்

ஈரோடு:ஈரோடு ராசாம்பாளையம் ஓடை புதுப்பாலம் பகுதியில், வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடி வந்த, 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஈரோடு சுக்கிரமணிய வலசு அய்யன்காடு பகுதியை சேர்ந்த முனுசாமி, 52, பெரியசேமூர் சென்னகாட்டு தோட்டத்தை சேர்ந்த தங்கராஜ், 45, அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 36, கள்ளன்காடு பகுதியை சேர்ந்த இளங்கோவன், 31, என தெரிந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ