உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாகர்பாளையம் சாலையில் குப்பையால் சுகாதார கேடு

நாகர்பாளையம் சாலையில் குப்பையால் சுகாதார கேடு

கோபி கோபி-சத்தி சாலையில், நாகர்பாளையம் பிரிவு சாலை வழியாக, கலிங்கியம், அவ்வையார்பாளையம், அயலுார் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் வாகன நடமாட்டம் உள்ளது. இப்பகுதி சாலையோரத்தில் மூட்டை, முடிச்சுகளாக, குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், குப்பைகளை தெருநாய் கிளறி, சாலையில் போட்டு செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, எதிரெதிரே வரும் வாகனங்களின் முட்டி மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பஞ்., நிர்வாகம் குப்பைகளை முறையாக அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை