காஸ் சிலிண்டர் புகார் தெரிவிக்க எண் வெளியீடு
ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், எண்ணெய் வணிக நிறுவன அலுவலர், காஸ் சிலிண்டர் விற்பனை முகவர்களுடன், வினியோகம் குறித்த கூட்டங்கள் நடத்தப்பட்டது. வீட்டு உப-யோக காஸ் சிலிண்டர் வழக்கமான இடைவெளியில் வீடுக-ளுக்கு வழங்கப்படுவதாக, நிறுவன அலுவலர்கள் உறுதியளித்-தனர். வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை அச்சத்துடன், இணைய வழியில் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கமான நாட்களில் காஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம். அதில் ஏதாவது புகார் இருந்தால், கலெக்டர் அலுவலக புகார் எண்: 0424 2252052 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்-துள்ளார்.