கேட் வால்வு சீரமைப்பு பணி நிறுத்தம் மூலப்பட்டறை நால்ரோட்டில் சிக்கல்
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 36வது வார்டுக்கு உட்பட்ட மூலப்பட்டறை நால்ரோட்டில் இருந்து ஏ.பி.டி., ரோடு செல்லும் வழியில் தண்ணீர் திறக்கப்படும் கேட் வால்வு உள்ளது.இங்கு சீரமைக்கும் பணி நடந்தது. சாலையில் உள்ளதால் பாதுகாப்புக்காக சுற்றிலும் பேரிகார்டு வைத்து தடுத்தனர். ஒரு மாதமாகியும் பணி முடியவில்லை. இதனால் பேரிகார்டும் அகற்றப்படாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக சேலம், நாமக்கல் மார்க்கத்தில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்பட்டு சிக்கி தவிக்கின்றன. மேலும் மெத்தனம் காட்டாமல் சீரமைப்பு பணியை முடித்து, பேரிகார்டுகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.