பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
ஈரோடு, ஈரோட்டில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று இரண்டாம் நாளாக நடந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மாவட்டத்துக்குள் கலந்தாய்வு முடிந்தது. நேற்று முன் தினம் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வரும், 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பெற்று, பிற மாவட்டத்துக்கு பணியிட மாற்ற ஆணை வாங்கி சென்றனர். நேற்று இரண்டாம் நாளாக கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடந்தது. இதில் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.