உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை சரிவு

ஈரோடு: திருவண்ணாமலை பகுதியில் இருந்து இஞ்சி அதிகமாக வரத்-தானதால், 2 கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது.ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு, ஈரோடு மாவட்டம் தாளவாடி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஞ்சி வரத்தாகிறது. கடந்த மாதங்களில் வரத்து குறைந்ததால், கிலோ, 350 ரூபாய்க்கு மேல் சென்றது.சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால், திருவண்-ணாமலை, தாளவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் இஞ்சி அதிகம் விளைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு நேரடியாக இஞ்சி வரத்தாவதுடன், சில வியாபாரிகள் வாகனங்களில் ஏற்றி வந்தும் விற்கின்றனர்.ஈரோடு, ஆர்.கே.வி., சாலை, வீரப்பன்சத்திரம், மீனாட்சிசுந்த-ரனார் சாலை பகுதியில் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு விற்-பனை செய்யப்படும் இஞ்சி, ஒரு கிலோ, 60 ரூபாய், 2 கிலோ-வாக வாங்கினால், 100 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். இவை பச்சை இஞ்சியாக உள்ளதால், மார்க்கெட்டில் சற்று காய்ந்த இஞ்சி, ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு மேல் விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை