பெண் குழந்தை பலி
பவானி: நசியனுாரை சேர்ந்தவர் மாணிக்கம், 30; டாட்டா ஏஸ் வாகன டிரைவர். இவரின் மனைவி கஸ்-துாரி. கயல்வழி என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த குழந்தை எவ்வித சலனமும் இன்றி காணப்பட்டது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். மருத்துவ பரி-சோதனையில் குழந்தை இறந்து விட்டது தெரிய வந்தது. மாணிக்கம் புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.