உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் மோதி சிறுமி காயம்

பைக் மோதி சிறுமி காயம்

கோபி :கோபி அருகே அக்கரை கொடிவேரியை சேர்ந்த வடிவேல் ராஜனின் மகள் கபிலா, 7. இவர் கடந்த, 28 காலை 10:00 மணிக்கு கடைக்கு மிட்டாய் வாங்கி வர, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பல்சர் பைக்கில் வந்த, கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த குமார், 30, என்பவர், சிறுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார். பலத்த காயமடைந்த சிறுமி கபிலா, சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வடிவேல் ராஜன் நேற்று கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை