உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் மீண்டும் நாய்கள் கடித்து ஆடு பலி

சென்னிமலையில் மீண்டும் நாய்கள் கடித்து ஆடு பலி

சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி குருந்தன்காட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர், 10 வெள்ளாடு வளர்த்து வருக்கிறார். அதில் ஒரு ஆட்டை நேற்று காலை, நான்கு தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து துரத்தி கடித்ததில் பலியானது. அப்பகுதி மக்கள் விரட்டியதால் மற்ற ஆடுகள் காப்பாற்றப்பட்டன. சென்னிமலையில் இதுவரை இரவில் மட்டுமே பட்டியில் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய தெருநாய்கள், தற்போது பகலிலேயே ஆட்டை கடித்துள்ளது, ஆடு வளர்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை