உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஜினியரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி உதவியாளர் கைது

இன்ஜினியரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம்: கோபி நகராட்சி உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோபி : சிவில் இன்ஜினியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, கோபி நகராட்சி உதவியாளரை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர், வருண், 30. சிவில் இன்ஜினியர்; அவர் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி ஆபீசில் உள்ள நகரமைப்பு அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அப்பிரிவின் உதவியாளரான சுப்பிரமணி, 50, என்பவர், சிவில் இன்ஜினியர் வருணிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் வருண் புகார் அளித்தார். அப்புகாரின்படி, ஏ.டி.எஸ்.பி., ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் அடங்கிய குழுவினர், கோபி நகராட்சி ஆபீசில் காலை 11:00 மணிக்கு முகாமிட்டு மறைந்திருந்தனர். அப்போது ரசாயன பொடி தடவிய, 60 எண்ணிக்கை கொண்ட, 500 ரூபாய் நோட்டுகளாக, 30 ஆயிரம் ரூபாயை, இன்ஜினியர் வருண் வழங்கியபோது, சுப்பிரமணியனை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிடித்து கைது செய்தனர். இதனால்,கோபி நகராட்சி ஆபீசில் காலை முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
மார் 26, 2025 06:28

என்னவோ புதிதாக லஞ்சம் வாங்கி மாட்டியதுபோல ஒரு செய்தி கடவுளுக்கு அடுத்தபடியாக எங்கும் நிறைந்தது லஞ்சமே இவர் வீட்டில் நெருப்புப் பிடித்தால் இவர் வாங்கிய லஞ்சுக்கணக்கு வெளிவரும்


Kasimani Baskaran
மார் 26, 2025 04:07

10 பாலாஜி போல அடித்தால் விட்டு இருப்பார்கள்.


karthik v
மார் 25, 2025 22:40

காவந்தப்பாடி துணை பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக சோதனை நடத்த வேண்டும். ஆவண எழுத்தாளர்கள் மற்றும் தரகர்கள் மூலம் லஞ்சப் பேரம் நடந்து வருகிறது. இதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி