உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில் 12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்

கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில் 12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்

கோபி:கோபி போக்குவரத்து பிரிவு போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், 12 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 30.92 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்னனர்.கோபி போக்குவரத்து போலீசார், கடந்த ஜனவரி மாதம் முதல், கடந்த ஆக., 28 வரை வாகன சோதனை செய்ததில், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 3,862 பேர் மீதும், போதையில் வாகனம் ஓட்டியதாக, 421, மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக, 529, அதிவேகமாக வாகனம் இயக்கியது, 52, அதிகசப்தம் எழுப்பும் வகையில் வாகனம் இயக்கியது, 117, அதிகபாரம் ஏற்றியதாக, 27, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக, 476, பிற சாலை விதிமீறலாக, 2,270 வழக்குகள் என மொத்தம, 12 ஆயிரத்து, 78 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு, தணிக்கை அறிக்கை வழங்கி, இதுவரையில் 30.92 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை