மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்
13-Jul-2025
ஈரோடு, ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாநில செயலர் சாமிகுணம் கோரிக்கை குறித்தும், மாவட்ட செயலர் வெங்கிடு, வேலை அறிக்கை பற்றி பேசினர்.முன்னாள் மாநில செயலர் ராஜசேகர், உஷாராணி, மகளிர் குழு செந்தாமலர் ஆகியோர் பேசினர்.வருவாய் கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலவரை ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அனைவருக்கும் குடும்ப ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். லட்சக்கணக்கில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.மாவட்ட இணை செயலர் கனிமொழி நன்றி கூறினார்.
13-Jul-2025