உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு

அரசு பள்ளியில் கட்டடம் திறப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1.73 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ஏழு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தை, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்செல்வி தலைமை வகித்தார். நிகழ்வில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செல்வம், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பாலன், முன்னாள் பஞ்.,தலைவர்கள் மூர்த்தி, சத்யா சிவராஜ், சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !