மேலும் செய்திகள்
உதவி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
10-Jun-2025
தாராபுரம், அரசு போக்குவரத்து ஓட்டுனர் தாக்கப்பட்டதை கண்டித்து, தாராபுரத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை டிரைவர் கணேசன், 49; கடந்த, 8ம் தேதி இரவு மதுரையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சை ஓட்டிச் செல்லவிருந்தார், அப்போது மதுரை துணை மேலாளர் மாரிமுத்து, கணேசனை தகாத வார்த்தை பேசி செருப்பால் தாக்கியது, தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை கண்டித்து தாராபுரம் போக்குவரத்து கழகம் பணிமனை முன், நேற்று முன்தினம் அனைத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மாரிமுத்துவை தாக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
10-Jun-2025