உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவலர் வீர வணக்க நாள்

காவலர் வீர வணக்க நாள்

காவலர் வீர வணக்க நாள்ஈரோடு, அக். 22-நாடு முழுவதும் பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்.,21ல் காவலர் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளான நேற்று, ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. வீரவணக்கம் செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீஸ் உயர் அதிகாரிகளும் வீரவணக்கம் செய்து, அஞ்சலி செலுத்தினர்.* பர்கூர் வனப்பகுதி தட்டக்கரையில், அதிரடிப்படை முகாம் உள்ளது. இங்கும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழக முன்னாள் டி.ஜி.பி.,யும், அதிரடிப்படை முன்னாள் தலைவருமான வால்டர் தேவாரம், அதிரடிப்படை முன்னாள் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், போலீசார், அதிரடிப்படையினர், நினைவு துாணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி