உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடில் துப்பாக்கி பறிமுதல் டில்லியில் கைதான வாலிபர்

ஈரோடில் துப்பாக்கி பறிமுதல் டில்லியில் கைதான வாலிபர்

ஈரோடு:ஈரோடு, சத்தி சாலை, ஆர்.ஆர்.லாட்ஜ் அறை ஒன்றில், செப்., 23 முதல், 25 வரை இரு நபர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் காலி செய்தபின், செப்., 25 மாலை, தலையணைக்கு அடியில் இருந்து கைத்துப்பாக்கி, ஆறு தோட்டாக்களை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.ஈரோடு டவுன் போலீசார், அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்து, அறையில் தங்கிச் சென்ற நபர்களின் வீடியோக்களை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர், டில்லி சென்று விசாரித்து, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை, 6ம் தேதி கைது செய்து, ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.போலீசார் கூறியதாவது:ஈரோடு லாட்ஜ் அறையில் தங்கிய இருவரில், ஒருவரான டில்லியைச் சேர்ந்த தாரிப் கான், 24, என்பவரை டில்லியில் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள இன்னொரு நபர், வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரை அழைத்து வந்ததாக, கைதான நபர் தெரிவித்தார். இவரை, வரும் 12 வரை காவலில் வைத்து விசாரிக்க டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ