மேலும் செய்திகள்
போக்சோ வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
27-May-2026
ஈரோடு:கோபி கொளப்பலுாரை சேர்ந்தவர் மணி, 56; போக்சோ வழக்கில் கைதாகி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, கோபி அனைத்து மகளிர் போலீசார், ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதி வாயிலாக கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் பரிந்துரையை ஏற்றதால், குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், மணி அடைக்கப்பட்டார்.
27-May-2026