குருநாதசுவாமி கோவில் தேரோட்டம் அந்தியூரில் போக்குவரத்தில் மாற்றம்
அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா நாளை மறுதினம் (13ம் தேதி) தொடங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள், பக்தர்கள், வியாபாரிகள் என லட்சக்ணக்கானார் பங்கேற்பர்.இதனால் அந்தியூரில், 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்தியூர் வழியாக வரட்டுப்பள்ளம் பர்கூர் கர்நாடக மாநிலத்துக்கு, இரண்டு, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும், அரசு மருத்துவமனை, ஜி.எஸ்.காலனி, மந்தை, வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட், பர்கூர் வழியாகவும், அங்கிருந்து வரும் வாகனங்கள் மூலக்கடை, வெள்ளித்திருப்பூர், பட்லுார் நால்ரோடு வழியாக பவானி, அம்மாபேட்டை, ஈரோடு செல்லவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.